தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் தலைவர்களுக்கிடையேயான வார்த்தைப்போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த விமர்சனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் முன்னாள் எம்.பி கனிமொழி சோமு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். எடப்பாடி பழனிசாமி தனது கண்ணியமற்ற பேச்சுகளுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி இது போன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்து வருவதாக கனிமொழி சோமு சாடினார். அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாகவும், இதன் காரணமாகவே கூட்டத்திற்கு கூட்டம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “அரசியல் களத்தில் மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி பேசுவதை விடுத்து, தனிநபர் விமர்சனங்களில் ஈடுபடுவது ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு அழகல்ல” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவது ஒட்டுமொத்த பெண் குலத்தையே இழிவுபடுத்துவதற்குச் சமம் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கள் ஒரு பொறுப்பான அரசியல் தலைவருக்கானதாக இல்லாமல், மூன்றாம் தர பேச்சாளர் போல் இருப்பதாக அவர் விமர்சித்தார். கனிமொழி எம்.பி குறித்த அவதூறு பேச்சுகளுக்காக எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மத்தியில் ஆளும் பாஜகவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்கும் போராக இந்தத் தேர்தலை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய செயல்பாடுகள் பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அநாகரிகமான பேச்சுக்களுக்குத் தமிழகப் பெண்கள் தேர்தல் வாக்குப்பதிவின் மூலம் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும், அவர் முதலில் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் திமுக நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…