ElectionResult 2026: சொந்த மண்ணில் எடப்பாடியார் கெத்து…! 11-ல் 7 தொகுதிகளை அள்ளும் அதிமுக..நிலைகுலைந்த ஆளுங்கட்சி..!!

By Soundarya on வைகாசி 4, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அந்தத் தொகுதிகளின் தற்போதைய தேர்தல் நிலவரப்படி அதிமுக அமோக முன்னிலை பெற்றுள்ளது. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 11 சட்டமன்றத் தொகுதிகளில், 7 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் தற்போதைய நிலவரப்படி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த வெற்றி முகம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியின் கடும் சவால்களையும் மீறி, தனது கோட்டையான சேலத்தில் அதிமுக தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் செல்வாக்கின் மூலம் மாவட்டத்தை மீண்டும் கட்சியின் பலமான அரணாக மாற்றியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலவரம் மாநிலம் முழுவதும் அதிமுகவிற்கு ஒரு புத்துயிரைத் தந்துள்ளது.