ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்… அதிமுக மூத்த தலைவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… 75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்கும் எடப்பாடி…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல் என்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையன் மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளதால் அதிமுகவின் முக்கிய தலைவர்களை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இது இபிஎஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் தனது கட்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் 2026 தேர்தலில் குறைந்தது 175 இடங்களில் அதிமுக போட்டியிட வேண்டும் என ஈபிஎஸ் கணக்குப் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்களுக்கு விரும்பும் தொகுதியில் சீட் கொடுத்து சமரசம் செய்யும் அவர் தனக்கு விசுவாசிகளாக இருக்கும் சுமார் 75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளார். தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பாட்டால் எம்எல்ஏக்கள் விலை போய் விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.