“இனியும் சும்மா விட மாட்டேன்”…. தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்…. ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி… மாவட்டச் செயலாளர்கள் போட்ட கண்டிஷன்….!

By Nanthini on ஆடி 27, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் களமிறங்கிய அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்தின் அலை காரணமாக எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தோல்வி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே, தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம்பெறலாம் என்ற திட்டத்துடன் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கடும் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, அந்த 25 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளைப் பறித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். எஞ்சிய எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டபோதிலும், அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவிகள் மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி புதிதாக வழங்கிய பொறுப்புகளை ஏற்க மறுத்து, சாதாரணத் தொண்டராகவே தொடர்வதாகத் தெரிவித்தனர். அத்துடன், கட்சி நிகழ்வுகளையும் எடப்பாடி பழனிசாமி கூட்டு கூட்டிய ஆலோசனைக் கூட்டங்களையும் முற்றிலுமாகப் புறக்கணித்து வந்தனர்.

   

இந்நிலையில், அதிமுகவை வலுப்படுத்துவது குறித்து 85 மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கடந்த ஒரு மாத காலமாகத் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். இதில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு நம்பிக்கைத் துரோகம் இழைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு மீண்டும் எக்காரணம் கொண்டும் கட்சிப் பதவிகளை வழங்கக் கூடாது என்றும் மாவட்ட நிர்வாகிகள் திட்டவட்டமாக வலியுறுத்தினர்.

   

ஆலோசனைக் கூட்டப் புறக்கணிப்பால் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் உள்ளார். இவர்கள் மீது இன்னும் ஓரிரு நாட்களில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிருப்தியாளர்களின் பதவிகளைப் பறித்த பிறகு, வரும் ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றுவதற்கான புதிய வியூகங்களை வகுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.