சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் நீக்கம், மாற்றம் குறித்த அறிவிப்புகளை இபிஎஸ் ஜெயலலிதா பாணியில் வெளியீட்டு வருகின்றார். கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், ஒன்றிணைப்பு குறித்து பேசுவோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார்.
இந்நிலையில் டெல்லி சென்றுள்ள இபிஎஸ் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தனியாக அமித்ஷா உடன் பேசியதாக கூறப்பட்ட நிலையில் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாக, EPS விளக்கம் அளித்துள்ளார். அதில், ” நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் கடிதம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
