பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியாவின் சார்பாக தமிழகத்திலிருந்து சென்னை கண்ணகி நகரை சேர்ந்த வீராங்கனை ஆர்.கார்த்திகா துணை கேப்டனாக பங்கு பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றார் . இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்திற்கு கார்த்திகாவை அழைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் பூங்கொத்து மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
