தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாஜகவிற்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் ஒரு தொகுதி மட்டுமே கிடைத்துள்ள நிலையில், கூடுதல் தொகுதிகளைப் பெற்று அங்கு மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையைக் களம் இறக்க வேண்டும் என உள்ளூர் நிர்வாகிகள் தீவிரமாக நம்பியிருந்தனர். குறிப்பாக, சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் அவரது தேர்தல் கனவு சிதைந்துள்ளது.
கோவை வடக்கு தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கே மீண்டும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதால், அண்ணாமலைக்கு இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கட்சித் தலைமை உத்தரவிட்டால் போட்டியிடத் தயார் என்று கூறி வந்த அண்ணாமலை, கடந்த சில மாதங்களாகவே மேற்கண்ட தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இந்த பின்னடைவு அவர் திட்டமிட்ட அரசியல் நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.
அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் பின்னணியில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது அவர் எடுத்த தனிப்பட்ட முடிவுகள் மற்றும் சமீபகாலமாக அவர் சந்தித்த சொத்துக் குவிப்பு உள்ளிட்ட புகார்கள் காரணமாக அவர் ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், நயினார் நாகேந்திரனுடன் ஏற்பட்ட பனிப்போர் மற்றும் வானதி சீனிவாசன், எல்.முருகன் போன்ற மூத்த தலைவர்களுடனான அதிகாரப் போட்டி என உட்கட்சிப் பூசல்களே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…