முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்க அனுமதி கோரி, தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை (ED) புதிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. முன்னதாக, தி.மு.க ஆட்சியில் அவரை விசாரிக்கத் தேவையான அனுமதி மறுக்கப்பட்டதால், நீதிமன்ற விசாரணை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கூடுதல் ஆதாரங்கள் மற்றும் முக்கிய ரகசியக் குறிப்புகளுடன் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை இந்த புதிய கடிதத்தை அனுப்பியுள்ளது. வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கில் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதம், செந்தில் பாலாஜிக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மீண்டும் ஒரு புதிய நெருக்கடியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
