உங்கள் உணவில் அடிக்கடி நீங்க முள்ளங்கி சாப்பிடணும்… ஏன் தெரியுமா?

By Elango on மார்கழி 12, 2025

Spread the love

பெரும்பாலானவர்கள் முள்ளங்கியை விரும்பி சாப்பிடுவதில்லை. அதன் மணமும் சுவையும் சிலருக்கு பிடிப்பதில்லை. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் முள்ளங்கி பல விதங்களில் உதவுகிறது. முள்ளங்கியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதில் ஆண்டி ஆக்சிடென்ட்களும் மிக அதிகமாக உள்ளன. இது உடலில் உள்ள ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும். முள்ளங்கியில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன. பொட்டாசியம் வைட்டமின் பி6 கால்சியம் மக்னிசியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் முள்ளங்கியில் நிறைந்து காணப்படுகின்றன.

கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற முள்ளங்கி உதவுகிறது. கல்லீரலில் உள்ள நொதிகள் மற்றும் என்சைம்களின் செயல்பாட்டை மேம்படுத்தி கல்லீரலின் வடிகட்டும் திறனை அதிகரிக்க செய்கிறது. உடல் சோர்வையும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழுத்தங்களையும் குறைக்க செய்யும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். ஆயுர்வேதம் முள்ளங்கியை தினசரி உணவில் கட்டாயம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறது. ஆயுர்வேதம் ரத்தத்தை சுத்திகரிக்க உதவி செய்யும் காய்கறி பட்டியலில் முள்ளங்கியை சேர்த்துள்ளது.

   

உடலின் அடிப்படையான இயக்கத்திற்கு காரணமான வாதம் பித்தம் கபம் ஆகியவற்றை சமன் செய்ய முள்ளங்கி உதவுகிறது. இதனால் ஜீரண மண்டலம் மிகச் சிறப்பாக வேலை செய்யும். கொழுப்பு கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு முள்ளங்கி ஒரு அற்புதமான உணவு. கல்லீரல் மற்றும் பித்தப்பையில் சுரக்கும் பித்தத்தின் அளவை சம நிலையில் வைத்திருக்க முள்ளங்கி உதவுகிறது. கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க முள்ளங்கி உதவி செய்யும். முள்ளங்கியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று உணவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.