ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா?…. ஆகஸ்ட் 29-க்குள் இதை செய்யாவிட்டால் இலவச அரிசி கட்…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஆவணி 26, 2026

Spread the love

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளில் eKYC பதிவை 100% நிறைவு செய்யும் உயரிய நோக்கில், வரும் 29-ம் தேதி மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இச்சிறப்பு முகாமில், பொதுமக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் நேரில் சென்று விரல்ரேகைப் (e-KYC) பதிவைப் புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். குறித்து வைக்கப்பட்ட காலக்கெடுவுக்குள்

இந்த e-KYC பதிவைச் செய்யத் தவறினால், ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் இலவச மற்றும் மானிய விலையிலான அத்தியாவசியப் பொருள்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் பதிவை உடனடியாக உறுதிசெய்து கொள்வது அவசியமாகும்.