BREAKING: திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த CM விஜய்… ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கில் சிக்கிய முக்கிய புள்ளி…!

By Nanthini on ஆனி 12, 2026

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கை மீண்டும் விரிவாக விசாரணை செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த ஊழல் தொடர்பாக, கடந்த திமுக ஆட்சியின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

ஆனால், அரசியல் மாற்றங்களால் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு முடித்துக் கொள்ளப்படுவதாக முந்தைய அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், கிடப்பில் போடப்பட்ட இந்த முக்கிய ஊழல் வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு மறுவிசாரணைக்கு வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.