அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி… தவெக-வில் இணையும் முக்கிய புள்ளி… கடைசி நேரத்தில் இபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த மா.செ….!

By Nanthini on பங்குனி 29, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ள தூசி கே. மோகனின் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்த தூசி மோகன், 2016-ல் செய்யாறு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியவர். கடந்த 2021 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த அவருக்கு, இந்த முறை அதிமுக தலைமை வாய்ப்பு மறுத்ததே இந்த அதிரடி முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அதிமுக சார்பில் 167 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மூன்று கட்டங்களாக வெளியான நிலையில், அதில் தனது பெயர் இடம்பெறாதது தூசி மோகனை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கட்சியிலும் தமக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற மனவருத்தத்தில் இருந்த அவர், இன்று சென்னை நட்சத்திர விடுதி ஒன்றில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து முறைப்படி தவெகவில் இணைகிறார். இதன் மூலம் செய்யாறு தொகுதியில் தவெக சார்பில் அவரே களமிறக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

   

தவெக தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட உள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகியான தூசி மோகன் இணைவது அக் கட்சிக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. தொகுதி செல்வாக்கு மிக்க ஒரு பழைய முகத்தை தவெக களமிறக்குவது, செய்யாறு தொகுதியில் மும்முனைப் போட்டியை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிமுக கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இத்தகைய கட்சித் தாவல்கள் தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.