துர்கா ஸ்டாலினின் “அவரும் நானும் – பாகம் 2” நூல் வெளியானது… வாசகர்களுக்கு ஒரு புது விதமான அனுபவம்… இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா..?

By Soundarya on ஆடி 21, 2025

Spread the love

துர்கா ஸ்டாலின் எழுதிய “அவரும் நானும்” பாகம் -2  நூலினை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட TAFE  குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மல்லிகா சீனிவாசன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்த புத்தகத்தில் மு.க ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை மற்றும் குடும்ப நிகழ்வுகள் பற்றி துர்கா ஸ்டாலின் எழுதி இருக்கிறார். மு க ஸ்டாலின் குமுதம் சினேகிதி இதழில் “தளபதியும் நானும்” என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக இந்த தொடர் வெளி வந்தது.

இந்த தொடருக்கு வாசகர்கள் அதிக அளவில் இருந்தார்கள். ஸ்டாலினின் அரசியல் பயணம், சந்தித்த கஷ்டங்கள், பிரச்சனைகள், சாதனைகள் என பல விஷயங்களை துர்க்கா ஸ்டாலின் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். துர்கா ஸ்டாலின் வெளியிடும் இந்த இரண்டாம் பாகத்தில் புதிய தகவல்கள் உள்ளன. முதல் புத்தகம் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது.

   

துர்கா ஸ்டாலின் எழுதிய அனுபவங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. தளபதியும் நானும் தொடருக்கு கிடைத்த வரவேற்பு  அதிகமாக இருந்ததால் இந்த புத்தகம் வாசகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப நிகழ்வுகளோடு அரசியல் நிகழ்வுகளும் கலந்திருப்பதால் இதில் ஒரு புதுமையான புத்தகமாக இருக்கும். முதல் பாகத்தில் இடம் பெறாத பல புதிய விஷயங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் இருக்கும். ஒரு அரசியல் தலைவராக ஸ்டாலின் வாழ்க்கையை அவருடைய மனைவியின் பார்வையில் இருந்து பார்க்கும் ஒரு சுவாரஸ்யமான புத்தகமாக இது இருக்கும். இந்த புத்தகம் வாசகர்களுக்கு ஒரு புது விதமான அனுபவத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.