அன்பில் மகேஷை தொடர்ந்து சிக்கும் அடுத்த விக்கெட்?…. துரைமுருகன் மீது பாய்ந்த ரூ.1,427 கோடி FIR…. இரவோடு இரவாக ஷாக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை….!

Spread the love

தமிழகத்தில் ஆற்றுமணல் கொள்ளை தொடர்பாக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உள்பட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 28 மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முதற்கட்டமாக 4 குவாரிகளில் மட்டும் கணக்கெடுத்ததில் அரசுக்கு சுமார் ரூ.1,427.34 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போலி அனுமதிச் சீட்டுகள் தயாரிப்பு, அரசு ஆவணங்களில் தவறான பதிவுகள் மற்றும் விதிகளை மீறி அதிக ஆழத்திற்கு மணல் அள்ளியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், நீர்வளத்துறை அதிகாரிகள் 18 பேர் மற்றும் 9 தனிநபர்கள் என மொத்தம் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 24 குவாரிகளிலும் முறையான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டால், இந்த மோசடியின் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் நடைபெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது மூத்த தலைவரான துரைமுருகன் மீதும் மெகா ஊழல் வழக்குப் பாய்ந்திருப்பது திமுக தலைமைக்குக் கடும் நெருக்கடியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கி வருவது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago