திமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படும் துரைமுருகன்?… உண்மை இதுதானா?.. பரபரப்பு தகவல்..!

By Nanthini on ஆடி 1, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தீவிரமாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக திமுக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தில் தங்களுடைய ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் அதற்கான வேலைகளை முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளை வைத்து செய்து வருகின்றார். அதேசமயம் திமுகவின் கூட்டணியையும் பலப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார்.

இப்படியான நிலையில் கடந்த சில நாட்களாக திமுகவின் பொது செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் புதிய பொதுச் செயலாளராக டி ஆர் பாலு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்த துரைமுருகன் விலக உள்ளதாகவும் அந்த பதவியை அவரது மகன் எம்பி கதிர் ஆனந்துக்கு வழங்க ஸ்டாலின் இடம் பரிந்துரைத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இப்படியான நிலையில் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு, இதெல்லாம் ஒரு அனுபவம் வாய்ந்த கேள்வி அல்ல, இதனை யாரும் பெரிதாக வேண்டாம் என்று துரைமுருகன் பதில் அளித்துள்ளார். அதேசமயம் அவர் இந்த செய்தியை மறுக்கவும் இல்லை, வதந்தி என்றும் கூறவில்லை என்பதால் அரசியலில் இது பேசு பொருளாகியுள்ளது.