காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்…. CM விஜய்க்கு துரை வைகோ திடீர் ஆதரவு… அதிரடி திருப்பம்…!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

விஜய்யின் அரசியல் வெற்றியை நாம் சிறுமைப்படுத்தக் கூடாது என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தலில் விஜய்க்கு வாக்களித்த மக்களின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், தற்போதே அவருடைய அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பது சரியாக இருக்காது என்பதால் குறைந்தது ஆறு மாத கால அவகாசத்திற்குப் பிறகே அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்குக் காரணம் நூறு விழுக்காடு சினிமாத் துறைதான்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது அவருடைய சொந்தக் கருத்து என்றும், மக்களின் ஆதரவும் உழைப்பும் இல்லாமல் யாரும் அரசியலில் வெல்ல முடியாது என்றும் துரை வைகோ தனது பேட்டியில் திட்டவட்டமாகப் பகிர்ந்துள்ளார்.