தமிழக அரசியலில் அவசரநிலை காலத்து ‘மிசா’ (MISA) சட்டமும், அது சார்ந்த கைதுகளும் மீண்டும் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளன. சட்டசபையில் முதல்வர் விஜய் அவர்கள் மிசா காலகட்ட நிகழ்வுகள் குறித்துப் பேசியதுடன், ஸ்டாலின் சிறையில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காயத்தைக் கேலி செய்யும் விதமாகத் தாடையில் கை வைத்து அசைத்ததாக எழுந்த சர்ச்சை இந்த விவாதத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, திமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதுடன், அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை என்றும், வேறு வழக்கில் தான் கைது செய்யப்பட்டார் என்றும் கூறிய கருத்துகள் அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தச் சூழலில், மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்பியுமான துரை வைகோ தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. மிசா சட்டத்தின் கீழ் திமுகவில் இருந்து கைது செய்யப்பட்ட முதல் நபரும், இறுதியாக விடுதலையான நபரும் வைகோ தான் என்ற வரலாற்று உண்மையைப் சுட்டிக்காட்டிய அவர், அக்காலத்தில் ஸ்டாலின் கைதானது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டார். இருப்பினும், ஸ்டாலினின் அந்தக் கைது நடவடிக்கை நூறு சதவீதம் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே நடக்கவில்லை என்றும், அதக்குப் பின்னால் பிற காரணங்களும் இருந்தன என்றும் அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
அன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கத்தினர் மட்டுமின்றி கம்யூனிஸ்ட் தலைவர்களும் மிசாவில் கைதாகிப் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானதைச் சுட்டிக்காட்டிய துரை வைகோ, பழைய செய்திக்குறிப்புகளையும் தலைவர்களின் அனுபவங்களையும் ஆராயும்போது பல உண்மைகள் தெரியவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். “அரசியல் நாகரீகம் கருதியே நான் இதற்கு மேல் விரிவாகப் பேச விரும்பவில்லை” என்று குறிப்பிட்ட அவர், ஸ்டாலினின் கைது முழுக்க முழுக்க அரசியல் ரீதியானதுதானா என்பது மிகப்பெரிய கேள்விக் குறி என்றும், ஆனால் 100% அது அரசியல் காரணம் அல்ல என்பதைத் தன்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் விஜய்யின் கை அசைவு சர்ச்சை குறித்துப் பேசிய துரை வைகோ, விஜய் ஏற்கனவே அது குறித்துத் தெளிவான விளக்கம் அளித்துவிட்டதை நினைவுபடுத்தினார். “எந்தவொரு தனிப்பட்ட நபரையும் குறிப்பிடும் நோக்கில் தான் செயல்படவில்லை என முதல்வர் விஜய் தெளிவுபடுத்திய பின்னரும், திமுகவினர் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் பேசி அனுதாபம் தேட முயல்கிறார்கள்” என அவர் சாடியுள்ளார். தமிழகத்தில் மக்கள் சார்ந்த எவ்வளவோ முக்கியப் பிரச்சினைகள் இருக்கும்போது, தனிப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களை முன்னெடுப்பதே சிறந்தது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…