சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூர கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டக் காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 05 அன்று பெசன்ட் நகரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 09 அன்று திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்பவரும் மர்மக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தொடர் கொலைகள் சென்னை மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவின்பேரில், நேற்று இரவு (செப். 10) நகரம் முழுவதும் விசேஷ தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர், ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் வீடுகள் மற்றும் தங்குமிடங்களில் விடிய விடிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் முடிவில், சரித்திரப் பதிவேடு பட்டியலில் உள்ள 185 ரவுடிகள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற பிடியாணை நிலுவையில் உள்ள தலைமறைவு குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ரவுடிக் குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல்கள் ஏதேனும் உருவாக வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் அமைதிக்கும் சட்டம் – ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என காவல் ஆணையாளர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…