கர்நாடக மாநிலத்தில் முன்னாள் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கப்பல் மாவட்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த எச்ஓ துரை(75) என்பவர் கர்நாடக போலீசில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று காலை தனது இல்லத்திலேயே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் இந்த முடிவை எடுக்க காரணம் என்ன என்பது குறித்து போலீஸ் ஆர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு அவருடைய மனைவி விபத்தில் உயிரிழந்ததால் அவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் சமீப காலமாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த உடல்நல பிரச்சனைகள் மற்றும் மனைவி இல்லாதது அவருடைய உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
