நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் உள்ள பிரபல தேநீர் கடையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் போதையில் வந்த நபர் ஒருவர் செய்த செயலால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த அந்த நபர், கடையில் வைக்கப்பட்ருந்த தேநீர் கொதி கலனை எதிர்பாராதவிதமாக தட்டிவிட்டு தலைகீழாக கவிழ்த்துள்ளார்.
இதன் காரணமாக, கொதிகலனில் இருந்த கொதிக்கும் பால் மற்றும் சுடுதண்ணீர் அங்கிருந்த ஊழியர்கள் மீது எதிர்பாராதவிதமாக பாய்ந்து சிதறியது. இந்த விபத்தில் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 ஊழியர்கள் கடுமையான பொள்ளல் காயங்களுக்கு ஆளாகி கதறினர்.
https://twitter.com/Autokabeer/status/2080263498139844874/video/1
உடனடியாக மீட்கப்பட்ட 3 ஊழியர்களும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கோட்டாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வரும் சூழலில், சாதியவாத பாமகவோடு விசிக ஒருபோதும் கூட்டணி வைக்காது…
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் கொத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமேனஹள்ளி பகுதியில், 2 வயதுக் குழந்தை ஒன்று வீட்டிற்குள்…
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…
ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…
அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…
நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…