ஐயோ… கள்ளக்காதலனுடன் தகராறு… ஆத்திரத்தில் 9 வயது சிறுவனின்… கழுத்தை நெரித்துக் கொன்ற போதை ஆசாமி… கோயம்பேட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 30, 2026

Spread the love

சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த தீபக் – பூவரசி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பூவரசி தன் 9 வயது மகன் தருணுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (35) என்பவருடன் பூவரசிக்குக் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. போதைக்கு அடிமையான தமிழ்செல்வன் பூவரசியிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்த போதிலும், இருவருக்குமிடையே நெருக்கம் நீடித்து வந்துள்ளது.

நேற்று இரவும் பூவரசியின் வீட்டிற்கு வந்த தமிழ்செல்வனுக்கும் பூவரசிக்கும் இடையே திடீரென மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பூவரசி வீட்டை விட்டு வெளியேறிய சமயத்தில், அங்கிருந்த தமிழ்செல்வன் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் தருணின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வீடு திரும்பிய பூவரசி மகன் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுததைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

   

தகவலறிந்து வந்த கோயம்பேடு காவல்துறையினர் சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கள்ளக்காதல் தகராறில் சிறுவன் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள தமிழ்செல்வனைத் தேடத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.