டேய்… கைய விடுடா… பார் ரகளையைத் தடுக்கச் சென்ற… காவலரைக் கடித்துக் குதறிய குடிகாரன்… கர்நாடகாவில் ஷாக்கிங் CCTV வீடியோ…!

By Swetha on புரட்டாதி 20, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவிற்கு உட்பட்ட என். சமகலஹள்ளி பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில், குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நபரைத் தடுக்க முயன்ற காவலரை, அவர் கடித்துக் குதறிய சம்பவம் வியாழக்கிழமை மாலை நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மோகன் ரெட்டி மற்றும் கௌதம் ஆகிய இருவர் மீது நங்கலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபானக் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த மோகன் ரெட்டியும் கௌதமும், அங்குள்ள காசாளர் குருசேகரிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத காசாளர் உடனடியாக நங்கலி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் வித்யாஸ்ரீ மற்றும் ஜீப் ஓட்டுநரான காவலர் நாராயணசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருவரையும் அமைதிப்படுத்த முயன்றுள்ளனர்.

   

https://twitter.com/HateDetectors/status/2101309082531455240/video/1

   

அப்போது, மோகன் ரெட்டியை அங்கிருந்து செல்லுமாறு காவலர்கள் கூறியபோது, அவர் ஆத்திரமடைந்து காவலர் நாராயணசாமியின் வலது கையை பலமாகக் கடித்துள்ளார். காவலரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், அவரை மோகன் ரெட்டியின் பிடியில் இருந்து மீட்டனர். இச்சம்பவம் முழுவதுமாக அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் இருவரையும் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.