BREAKING: சென்னையில் போதை மாத்திரை விற்பனை.. 7 பேர் அதிரடி கைது…!!

By Soundarya on கார்த்திகை 5, 2025

Spread the love

சென்னையில் வீடு ஒன்றில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக பெண் உள்பட 7 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். புழல் பகுதியில் போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலமாக செலுத்தி கொண்ட கல்லூரி மாணவனுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் 7 பேர் கொண்ட கும்பலிடம் 300 மாத்திரைகளும் சிக்கியுள்ளன.