“அரை நிர்வாணத்துடன் சுற்றிய போதை ஆசாமி…” இளம் பெண்கள் மாணவிகளை பின்தொடர்ந்து சென்று அட்ராசிட்டி…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

By Devi Ramu on ஐப்பசி 11, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு மது குடிக்க வரும் மது பிரியர்கள் பள்ளி சென்று வரும் சிறுமிகள், சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை வழிமறித்து தகராறு செய்து வந்தனர். எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மது அருந்தி வந்த போதை ஆசாமி ஒருவர் கேபிள் வயர்களை பிடித்து இழுத்து அந்த வழியாக சென்ற இளம் பெண்ணை அச்சுறுத்தியுள்ளார்.

மேலும் பள்ளி சென்று வந்த நான்கு சிறுமிகளையும் பின் தொடர்ந்து சென்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை அங்கிருந்து விரட்டி அடித்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்த போதை ஆசாமி அரசு பேருந்து கைகளால் அடித்தும், வழி மறித்தும் தகராறு செய்துள்ளார்.

   

பின்னர் அரை நிர்வாணத்துடன் அங்கு சுற்றி திரிந்து இளம்பெண்களை மிரட்டியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. போதை ஆசாமிகளால் மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.