#BREAKING: துபாய் விமான நிலையம் அருகே டிரோன் தாக்குதல்… விமான சேவைகள் நிறுத்தம்..!!

By Soundarya on பங்குனி 16, 2026

Spread the love

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று (மார்ச் 16, 2026) திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், அங்குள்ள விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் போது அங்குள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.