சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

By Devi Ramu on சித்திரை 18, 2026

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். ஆற்காட்டைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் செய்யாற்றைச் சேர்ந்த நரேஷ் ஆகிய இருவரும் இன்று காலை எதிரெதிர் திசையில் லாரிகளை ஓட்டி வந்தபோது, கலவை கூட்ரோடு பகுதியில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த பயங்கர மோதலில் இரண்டு லாரிகளின் முன்பகுதிகளும் முற்றிலுமாக உருக்குலைந்தன.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாரிகளின் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஓட்டுநர்களின் உடல்களை மீட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து கலவை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து நடந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.