“ஓ.. இதான் கஞ்சாவா..?” மாட்டுக்கு நோய் வந்தா இந்த செடியை தான கொடுப்பேன்… கைதான நபர் வாக்குமூலத்தால் பதறிப்போன போலீசார்… கடைசியில் தெரிந்த ரகசியம்..!!

By Soundarya on ஆனி 5, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, தனது வீட்டின் பின்புறத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த டிராக்டர் ஓட்டுநரான ரமேஷ் (45) என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சுமார் 32 கஞ்சா செடிகளைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரமேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் ஒரு வினோதமான விளக்கத்தை அளித்துள்ளார். தனக்கு அது கஞ்சா செடி என்றே தெரியாது என்றும், பசு மாடுகளுக்கு நோய் வந்தால் இந்தச் செடியின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து கொடுப்பேன், உடனே சரியாகிவிடும் என்றும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

   

“ஓ.. இதான் கஞ்சாவா..!” மாடுகளுக்கு மருத்துவக் குணம் கொண்ட செடி என நினைத்து கஞ்சா செடிகளை வளர்த்ததாகக் கைதான நபர் கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.