புவியீர்ப்பு விசைக்கே சவால் விடும் வகையில், செங்குத்தான மலைப்பகுதியின் உச்சிக்கு கார் ஒன்று சிலந்தி போல ஏறும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஆஃப்-ரோடிங் (Off-roading) சாகசங்கள் சவாலானவை என்றாலும், இந்த வீடியோவில் உள்ள கார் மலையின் மிகக் கடினமான, செங்குத்தான பகுதியில் எவ்வித சறுக்கலும் இன்றி மின்னல் வேகத்தில் மேலே ஏறுவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. காரின் எஞ்சின் கர்ஜிக்க, பேலன்ஸ் மாறாமல் அந்த ஓட்டுநர் கையாண்ட விதம் அவரை ஒரு ‘உண்மையான ஹெவி டிரைவர்’ என நெட்டிசன்கள் புகழச் செய்துள்ளது.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ சுமார் 34 லட்சம் பார்வைகளையும், 2 லட்சம் விருப்பங்களையும் பெற்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இது காரின் பலமா அல்லது ஓட்டுநரின் திறமையா?” என்று பலரும் விவாதித்து வருகின்றனர். புவியீர்ப்பு விசை இங்கே வேலை செய்யவில்லையா? என்று கிண்டலாகக் கருத்துத் தெரிவிக்கும் அதே வேளையில், இது போன்ற சாகசங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதால் யாரும் இதை முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்குத் திகைப்பாகவும், அதே சமயம் த்ரில்லாகவும் உள்ள இந்த வீடியோ ஆஃப்-ரோடிங் பிரியர்களிடையே தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.
