“ஐயோ யாராவது காப்பாத்துங்க”…. பிரியாணி அண்டாவில் தவறி விழுந்த ஓட்டுநர்…. ஹோட்டலில் நடந்த கொடூரம்…. நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்….!

By Nanthini on புரட்டாதி 14, 2026

Spread the love

புதுச்சேரி வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தேவநாதன் என்ற ஓட்டுநர், மதுபோதையில் உறவினரின் ஹோட்டலுக்குச் சென்றபோது கொதிக்கும் வெந்நீர் அண்டாவில் தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரிவர வேலைக்குச் செல்லாமல் தீவிர மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த தேவநாதன், கடந்த 8-ஆம் தேதி மது அருந்திய நிலையில் வில்லியனூரில் உள்ள தனது உறவினரின் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார்.

அந்நேரத்தில் ஹோட்டலில் பிரியாணி தயாரிப்பதற்காக பெரிய அண்டாவில் தண்ணீர் தீவிரமாக கொதித்துக் கொண்டிருந்தது. மதுபோதையில் இருந்த தேவநாதன் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி, கொதித்துக் கொண்டிருந்த அந்த வெந்நீர் அண்டாவிற்குள் தவறி விழுந்துள்ளார். இதில் உடலின் பெரும்பகுதியில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு, அவர் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.

   

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்களும் அங்கிருந்தவர்களும் உடனடியாக அவரை மீட்டு வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், காயத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

   

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், உடலில் ஏற்பட்டிருந்த கடுமையான தீக்காயங்கள் காரணமாக தேவநாதன் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வில்லியனூர் காவல் துறையினர், ஹோட்டலில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா மற்றும் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.