“சத்தம் போட்டா கொன்னுடுவேன்…” மாற்று வழியே சென்ற டாக்சி ஓட்டுனர்… பதறிய பெண்ணுக்கு நடந்த கொடுமை…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 24, 2026

Spread the love

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குப் பணிக்குச் சென்ற தனியார் விமான நிறுவனத்தின் 37 வயது பெண் ஊழியர், அவர் பயணித்த டாக்சி ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய வழியை மாற்றி, தனிமையான இடத்திற்கு காரைக் கொண்டு சென்ற 23 வயதான எர்ரபோகு பிரசாந்த் குமார் என்ற ஓட்டுநர், வாகனத்திற்குள்ளேயே அந்தப் பெண்ணை அச்சுறுத்தி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடமிருந்து தப்பித்து ஓடிவந்த அந்தப் பெண், அருகில் இருந்த தொழிலாளியின் உதவியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மறுநாளே குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பெண் ஊழியர்களின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.