பஸ்ஸில் ஏற முயன்ற நபர்… காலால் எட்டி உதைத்த ஓட்டுனர், நடத்துனர்…. கொந்தளித்த பொதுமக்கள்… பெரும் பரபரப்பு சம்பவம்….!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஒன்றில் ஏற முயன்ற நபர் மீது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இணைந்து நடத்திய தாக்குதலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழையில் நின்றுகொண்டிருந்தபோது பேருந்தின் அருகில் வந்த நபர் தள்ளாடிய நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஓட்டுநர் அவரை நெஞ்சில் காலால் உதைத்துச் சாலையில் தள்ளியுள்ளார். அதனைத் தொடர்ந்து, காக்கிச் சீருடையிலிருந்த நடத்துநரும் கீழே கிடந்த அந்தப் பயணியின் முகத்தில் மிதித்துக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

   

இந்தச் சம்பவம் தொடர்பான இரண்டு நிமிடக் காணொளி வெளியாகித் தீயாய் பரவி வரும் நிலையில், கோயம்புத்தூர் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இதுகுறித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்களைத் தாக்காமல் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்க வேண்டிய போக்குவரத்து ஊழியர்களின் இந்த அத்துமீறல் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.