எச்சரிக்கை… நீங்கள் குடிக்கும் கேன் வாட்டர் உயிருக்கு ஆபத்தா?…. அதிர்ச்சி தரும் உண்மை…. இனி இந்த தவறை பண்ணாதீங்க…!

Spread the love

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் வெப்பம் சதம் அடித்து வருகிறது. தாகத்தைத் தணிக்க பொதுமக்கள் பெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட மற்றும் கேன் குடிநீரையே நம்பியுள்ளனர். இருப்பினும், முறையாக சுத்திகரிக்கப்படாத மற்றும் தரமற்ற கேன் குடிநீரால் மக்களுக்கு ஒவ்வாமை மற்றும் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு சுகாதாரத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறைக்குத் தமிழக அரசு கடும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட தனியார் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் தரத்தைக் கண்காணிக்க உணவுப் பாதுகாப்புத் துறையினர் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுவதோடு, தொடர் புகார்களுக்கு உள்ளாகும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு குடிநீர் கேனிலும் நிறுவனத்தின் பெயர், FSSAI உரிமம், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவை தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கேன் குடிநீர் விநியோகத்தில் சுகாதாரத்தைப் பேணப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குடிநீர் கேன்களை நேரடியாகச் சூரிய ஒளியில் படும்படி அடுக்கி வைக்கக் கூடாது. ஒரு கேனை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது என்பதும், பழைய மற்றும் சேதமடைந்த கேன்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதும் முக்கியமான விதிகளாகும். கடைகளில் விற்கப்படும் நீர் சுகாதாரமற்ற முறையில் இருந்தால் கடை உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிநீரில் இருக்க வேண்டிய தாதுக்களின் அளவு குறித்தும் தெளிவான வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் குடிநீரில் கால்சியம் மி.கி அளவிலும், மெக்னீசியம் மி.கி அளவிலும் இருப்பதை உற்பத்தியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தச் சத்துக்கள் குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ அது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பதால், வேதியியல் பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் நோய் பாதிப்புகள் இன்றி மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடுகள் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

6 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

6 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

6 மணத்தியாலங்கள் ago