காலையில் தூக்கம் வந்தால் டீ குடிப்பவர்கள், மாலை நேரத்தில் சோம்பலாக உணர்ந்தாள் டீ குடிப்பவர்கள், யாரிடமாவது சாதாரணமாக பேச வேண்டும் என்றாலும் டீ குடிப்பவர்கள் என டீக்கு அடிமையானவர்கள் ஏராளம். ஆனால் அதிகமாக டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தேனீர் அருந்துவதற்கு முன்பு அல்லது பிறகு தண்ணீர் குடிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். ரேவா ஆயுர்வேத மருத்துவமனையின் டீன் இது குறித்து கூறுகையில், இன்றைய நாட்களில் மது அருந்துவோரை விட டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. காலையில் தூங்கி எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை பலவிதமான காரணங்களை கூறி அதிகமாக டீ குடிக்கின்றனர்.
அவ்வாறாக குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். கூடுதலாக தேநீர் அருந்துவதற்கு முன்பு அல்லது பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்று பலமுறை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதனால்தான் சில தேநீர் பிரியர்கள் இதைப் பற்றி அடிக்கடி குழப்பமடைகின்றனர். முதலில் டீ குடிப்பதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் டீ குடிப்பது தீங்கு விளைவிக்கும். இதனால் வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இப்படியான சூழலில் தேநீர் அருந்துவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கலாம். இதற்கு வெதுவெதுப்பான நீர் அவசியம்.
அவ்வாறு செய்வது உங்கள் உடலில் PH அளவை சமப்படுத்தும். அதாவது தேனீர் அருந்துவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது நன்மை தரும். தேநீர் அருந்திய உடனே தண்ணீர் குடிப்பது தவறான செயலாகும். இது சளி, மூக்கில் ரத்தம் வருதல் மற்றும் பல் சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சூடான தேநீர் அருந்திய பிறகு குளிர்ந்த நீரை குடிப்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் இதை செய்பவர்களின் பற்கள் அதிக உணர்திறன் கொண்டதாக மாறும்.
தேநீர் அருந்திய பிறகு குறைந்தது அரை மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். மிகவும் அவசியமென்றால் நீங்கள் ஒரு சிப் வெதுவெதுப்பான அல்லது சாதாரண தண்ணீரை குடிக்கலாம். அதிகமாக தேநீர் குடிப்பதும் பிரச்சனைதான். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் டீ குடிக்க வேண்டாம். குறிப்பாக வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதை அறவே தவிர்த்து விடுவது நல்லது.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…