பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 22 வயதான வாணிஸ்ரீ, சிவமோகா மாவட்டம் சாகர் தாலுகாவைச் சேர்ந்தவர் ஆவார். கல்லூரிப் படிப்பை முடித்த பின் வேலை தேடி பெங்களூரு வந்த அவரை, அவரது முன்னாள் கல்லூரி நண்பரான அபிஷேக் வாட்ஸ்-அப் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
வாணிஸ்ரீயின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாகக் கூறி அபிஷேக் கடுமையான மிரட்டல் விடுத்துள்ளார். இந்தத் தொடர் மிரட்டல்களாலும் மன உளைச்சலாலும் பயந்துபோன வாணிஸ்ரீ, கடந்த சனிக்கிழமை காலையில் விடுதியிலிருந்து வெளியேறியும் நீண்ட நேரமாகியும் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும், அபிஷேக்கிற்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் வாணிஸ்ரீ உருக்கமாக கடிதம் எழுதியிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழி உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். பெண்களை மிரட்டி இதுபோன்று அச்சுறுத்தும் குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மூலம் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…