2வது முறையாக ஹீரோவாக நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்.. டிராகன் படத்தில் இணைந்த 3 டக்கர் இயக்குனர்கள்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

By Nanthini on கார்த்திகை 10, 2024

Spread the love

தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பட்டித் தொட்டி எல்லாம் ஹிட்டான படம் தான் கோமாளி. இந்த திரைப்படத்தின் மூலம் சைமா வழங்கும் அறிமுக இயக்குனர்களுக்கான விருதை வென்று தமிழ் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு தன்னுடைய கலை பயணத்தை தொடங்கியவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காகவும் சைமா வழங்கும் அறிமுக நடிகருக்கான விருதை அவர் பெற்றார். இரண்டு திரைப்படங்கள்தான் இயக்கி இருக்கிறார் என்றாலும் இன்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

டிராகன்" பிரதீப் சம்பளம் இத்தனை கோடியா..?

   

ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் அவருடைய இயக்கத்தில் உருவாகவில்லை. பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற திரைப்படத்திலும், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற திரைப்படத்திலும் பிரதிப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகின்றார். அனுபமா பரமேஸ்வரன் இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார்.

   

டிராகன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | First look poster of ' Dragon' released

 

இந்த நிலையில் மயில்வாகனம் என்ற கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கின் அவர்களும், பரசுராம் என்ற கதாபாத்திரத்தில் மூத்த தமிழ் திரையுலக இயக்குனர் மற்றும் நடிகர் கே எஸ் ரவிக்குமார் அவர்களும் இணைந்து நடித்து வருகிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மேலும் youtube மூலமாக தமிழக முழுவதும் புகழ்பெற்ற விஜே சிந்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

டிராகன் திரைப்பட அப்டேட்!

மேலும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக இந்த திரைப்படம் தற்போது உருவாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் மூன்று பிரம்மாண்ட இயக்குனர்கள் இந்த திரைப்படத்தில் இயங்கி இருப்பது படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.