குஷியோ குஷி… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த வருஷம் டபுள் ட்ரீட்… ரெடியா இருங்க மக்களே…!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு 21 மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2023 மற்றும் 24 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையின் போது பச்சரிசி, கரும்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அடங்கிய தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. ஆனால் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை. அதற்கு பதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த முறை பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொங்கல் தொகுப்பில் அதிகபட்சமாக 2500 ரூபாய் ரொக்க பணமாக வழங்கப்பட்டது. இந்த முறை இதனை தாண்டி 5000 ரூபாய் ரொக்க பணமாக கொடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

   

தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது இரண்டு கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருந்த நிலையில் அந்த கணக்கை வைத்து பார்க்கும்போது ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கு 11 ஆயிரம் கோடி தேவைப்படும் என தெரிகிறது. இதனிடையே விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை செப்டம்பர் 12ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை முடித்த கையோடு ஜனவரி மாதம் மகளின் உரிமை தொகை மற்றும் பொங்கல் பரிசு என அடுத்தடுத்த ரொக்க பணத்தை ரேஷன் அட்டைதாரர்கள் பெற இருப்பதால் தை மாதம் தமிழக மக்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.