“எங்கள காப்பாத்துங்க நாங்க விஷம் குடித்து விட்டோம்”… வீடு எடுத்து வாழ்ந்த கள்ளக்காதல் ஜோடி… தேடிவந்த மனைவி… இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்..!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சாலைப்புதூர் நடுத்தெருவை சேர்ந்த தங்கவேல் சாமி (27) என்பவருக்கு கஸ்தூரி தேவி என்பவர் உடன் எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தங்கவேல் ஓட்டுநர் வேலை செய்து வருகிறார். இதனால் அடிக்கடி வெளியூருக்கு சென்று வந்துள்ளார். அப்போது திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி பார்வதிக்கும் தங்கவேலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறிய நிலையில் பார்வதி தன்னுடைய கணவரை பிரிந்து இரண்டு ஆண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். பார்வதிக்கும் தங்கவேல்சாமிக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தங்கவேல் பார்வதியுடன் சென்று வசித்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தங்க வேலுவின் மனைவி அவருடைய கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கஸ்தூரி தேவிக்கு பார்வதி பற்றி தெரிய வந்ததால் ஆத்திரமடைந்த அவர் கணவர் தங்கவேலுவை பிரிந்து அவருடைய சொந்த ஊரான பாண்டியபுரத்தில் குழந்தைகளுடன் தனியாக தாய் வீட்டில் வசித்து வந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தங்கவேலு திருநெல்வேலிக்கு சென்று பார்வதியுடன் ஒரே வீட்டில் தங்கிய இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

   

இதனை அறிந்த கஸ்தூரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருநெல்வேலிக்கு சென்று பார்வதி மற்றும் தங்கவேலுயிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் மன உளைச்சல் அடைந்துள்ளன. தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த பார்வதி மற்றும் தங்கவேலு காரின் தூத்துக்குடி வந்து பூச்சி மருந்தை வாங்கி குடித்துள்ளனர்.

   

பிறகு வாழ வேண்டும் என்று நினைத்த இருவரும் குலசேகரன் பட்டினம் காவல் நிலையம் முன்பு காரை நிறுத்திவிட்டு பூச்சிக்கொல்லையும் மருந்து அருந்தி வாயில் நுரை தள்ளியபடி எங்களை காப்பாற்றுங்கள் நாங்கள் விஷம் குடித்து விட்டோம் என்று கதறி உள்ளனர். இவர்களைப் பார்த்த போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.