அதிர்ச்சி..! முடங்கும் “வீடு தேடி ரேஷன்” திட்டம்..? முந்தைய அரசு செய்த தவறு … மூத்த குடிமக்கள் ஷாக்..!!

By Soundarya on வைகாசி 13, 2026

Spread the love

மூத்த குடிமக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ‘வீடு தேடி ரேஷன்’ திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான வாகன வாடகை உள்ளிட்ட இதர செலவுகளுக்கான நிதியை, திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அரசு வழங்கவில்லை எனத் தெரிகிறது.

அரசாங்கத்திடமிருந்து உரிய நிதி கிடைக்காததால், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் கூட்டுறவு சங்கங்கள் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக, இந்தச் சேவைத் திட்டத்தைத் தொய்வின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது மிகவும் கடினமான காரியம் என்று துறை சார்ந்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.