பிரேமம் படத்துக்கு சேரன் நினைச்சிருந்தா கேஸ் போட்டு இருக்கலாம்.. போடாதது இதனால் தானாம்.. மனமுருகி பேசிய சேரன்..

By Ranjith Kumar

Updated on:

சேரன் இயக்கத்தில் சினேகா கோபிகா இளவரசு சேனா பிளாக் பாண்டி நடிப்பில் வெளியாகி சக்க போடு போட்ட படம் தான் ஆட்டோகிராப். இப்படம் உருவானதற்கான காரணத்தை சேரன் அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு காதல்களை அடுக்கி சொல்லும் கதையாக ஆட்டோகிராப் படத்தை இயக்கி நடித்திருப்பார். அவருக்கு அந்த படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அதே போன்று ஒரு கதையை கருவாகக் கொண்டு பிரேமம் படத்தை இயக்கி அதை விட அதிக வசூலை அள்ளி இருப்பார் அல்போன்ஸ் புத்திரன்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சேரன், என்னிடம் அல்போன்ஸ் புத்திரன் மீது ஏன் காப்பி ரைட்ஸ் வழக்கு தொடரவில்லை என சிலர் அந்த படம் வெளியான போது கேட்டனர். பொதுவாகவே ஹாலிவுட் படங்கள் மீது இன்ஸ்பயர் ஆகித்தான் படங்களை எடுக்க வேண்டுமா,  நம்ம நாட்டு அல்லது பக்கத்து மாநிலத்தில் எடுக்கப்பட்ட படத்தை தழுவியோ அல்லது இன்ஸ்பையர் ஆகியோ படங்கள் எடுக்கக் கூடாதா,

   

நம்ம கதையை நம்மைவிட சிறப்பாக ஒருத்தர் இயக்கினால் அதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டுமே தவிர பொறாமைப் படக்கூடாது என சேரன் மிகவும் பக்குவமாக பேசியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதைக் கண்ட பெரும் ரசிகர்கள் பெருமிதம் கொண்டு இங்குள்ள சில இயக்குனர்கள் செய்வது தவறு இல்லை என்று ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar