அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது மற்றொரு சிறிய அளவிலான ‘எபிக் ப்யூரி’ ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று எச்சரித்துள்ளார். ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஒப்புக்கொள்ளாவிட்டால் அல்லது உரிய ஒப்பந்தத்திற்கு வராவிட்டால், அமெரிக்கா மீண்டும் கடுமையான தாக்குதல்களை நடத்தலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, துருக்கிக்கான அமெரிக்கத் தூதரான டாம் பராக்கின் கருத்துக்களும் இந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. இர்ரனா மீது அமெரிக்காவின் புதிய ராணுவத் தாக்குதல்கள் இந்த வார இறுதியில் கூட நடைபெற வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும், டிரம்ப் இன்னும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கும், ஒப்பந்தங்களுக்கும் தயாராகவே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இத்தகைய தொடர்ச்சியான எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, ஈரான் தரப்பிலும் கடும் எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கடலடித் தகவல் தொடர்பு கேபிள்கள் மற்றும் முக்கிய ராணுவத் தளங்களை குறிவைத்து பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
