ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து அந்நாட்டின் மீது போரைத் தொடங்கின. இதனால் ஹார்மூஸ் நீரிணை வழியிலான கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியது. போரை முடிவுக்குக் கொண்டுவர தற்காலிக உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், அந்தப் பாதையில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு மின் நிலையங்களை தாக்குவதாக அறிவித்தது.
அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஈரான் தாக்குதல்களைத் தொடர்வதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இனிமேல் தங்களின் கப்பல்கள் மற்றும் பொருட்களுக்கு ஏற்படும் அனைத்து இழப்பீடுகளையும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியிலிருந்தே எடுத்து ஈடு செய்யப்போவதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
