அதை செய்யாவிட்டால் “குண்டுகளை வீசுவோம்” ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்… மீண்டும் பதற்றம்..!!

By Soundarya on சித்திரை 21, 2026

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது குண்டுகள் வீசப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அதிரடியான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்குத் தயாராவதில் ஈரான் தரப்பில் தயக்கம் நீடித்து வரும் நிலையில், ட்ரம்பின் இந்த கடுமையான கருத்து சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்குமா என்பது குறித்து தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இருப்பினும் அவர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளார். இந்த விவகாரம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.