ஈரானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய அரசுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால் அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மொஜ்தாபா கமேனி தலைமையிலான புதிய அரசுக்கு சீனா ஆதரவளிப்பது கண்டறியப்பட்டால், அது சீனாவுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் தலைமை முற்றிலும் சிதைந்துவிட்டதாகக் கூறிய ட்ரம்ப், “ஈரானிடம் தற்போது கடற்படையோ, விமானப்படையோ அல்லது வலுவான தலைமையோ இல்லை, எதைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகளுக்கு இடையே ஒரு மாத காலப் போருக்குப் பிறகு முதல்முறை நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையிலான குழுவும் சுமார் 15 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டன. இதில் அமெரிக்காவால் முடக்கப்பட்ட ஈரானின் சொத்துகளை விடுவிப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு எட்டப்பட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தி வரும் நிலையில், இறுதித் தீர்மானங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மறுபுறம், ஈரானின் சொத்துகள் விடுவிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், தாங்கள் ஏற்கனவே போரில் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறினார். ஈரானின் ராணுவத்தை அமெரிக்கா துடைத்து எறிந்துவிட்டதாகவும், இனி அவர்கள் ஒப்பந்தம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அமெரிக்காவிற்குப் பாதிப்பில்லை என்றும் அவர் கறாராகத் தெரிவித்தார். மேலும், இந்தப் போர் நடவடிக்கைகளில் நேட்டோ (NATO) அமைப்பிடமிருந்து தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதையும் அவர் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், ஹார்மஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பயணித்தது தொடர்பாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. USS ஃப்ராங்க் இ பீட்டர்சன் மற்றும் USS மைக்கேல் மர்பி ஆகிய கப்பல்கள் ஹார்மஸ் பகுதியை வெற்றிகரமாகக் கடந்ததாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால், இந்தத் தகவலை ஈரான் ராணுவம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. ஹார்மஸ் நீர்வழிப்பாதையில் தங்கள் அனுமதியின்றி எந்தக் கப்பலும் நுழைய முடியாது எனத் தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்காவின் கூற்று வெறும் பொய் பரப்புரை என விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…