நாயையோ, பூனையையோ நடுரோட்டில் விட்டால் போதும்… ஸ்பாட்டிலேயே ரூ.10,000 அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!

Spread the love

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா தலைமையில் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் சமீரன் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளைப் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் கைவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையிலான முக்கியத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தொடக்கத்தில் ஆணையரின் குறிப்பில் ரூ.25,000 அபராதம் விதிக்க அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், பொது சுகாதாரம் மற்றும் நிதி நிலைக்குழு உறுப்பினர்களின் கருத்துகளைத் தொடர்ந்து, அபராதத் தொகை ரூ.10,000 ஆகக் குறைக்கப்பட்டு மன்றத்தின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ரூ.50 கட்டணம் செலுத்தி, வெறிநாய்க்கடி தடுப்பூசி சான்றிதழுடன் ஆன்லைன் மூலம் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதைத் தடுக்கும் பொருட்டு அவற்றின் உடலில் ‘மைக்ரோ சிப்’ பொருத்தும் நடைமுறையும் அமலில் உள்ளது. கடந்த ஜூலை 30, 2026 வரை சென்னையில் மொத்தம் 78,238 செல்லப்பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், உரிமம் பெற்ற பல பிராணிகள் சாலைகளில் தொடர்ந்து கைவிடப்படுவதாக மாநகராட்சிக்குத் தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து, இனி சாலைகளில் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்படும் நாய் அல்லது பூனைகளின் உடலில் உள்ள மைக்ரோ சிப்-ஐ ‘ஸ்கேனர்’ மூலம் பரிசோதித்து, உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரியைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மண்டல கால்நடை மருத்துவ அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மாநகராட்சியின் POS இயந்திரங்களைப் பயன்படுத்தி, இந்த ரூ.10,000 அபராதத் தொகையை உரிமையாளர்களிடம் நேரடியாக வசூலிக்கவும் இத்தீர்மானத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

8 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

8 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

8 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

9 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

9 மணத்தியாலங்கள் ago