35 அடி மரத்தின் மேல் ஏறி குடும்பத்தினருக்கு ஷாக் கொடுத்த வளர்ப்பு நாய்.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!

By Nanthini on ஆனி 9, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் மக்களை கவரும் வகையில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது லேடி என்று அழைக்கப்படும் வளர்ப்பு நாய் 35 அடி உயரமான மரத்தில் ஏறி மொத்த குடும்பத்தினரையும் அதிர வைத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு குடும்பம் வீடு திரும்பிய போது தங்கள் செல்ல நாய் லேடி காணாமல் போனதை கண்டு பக்கத்து வீட்டில் விசாரித்துள்ளனர். இப்படி தேடி ஊர் எங்கும் சுற்றி திரிந்த போது 35 அடி உயரத்தில் ஒரு மரத்தில் அமர்ந்திருப்பதை குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

அவர்கள் பார்த்தபோது அந்த நாய் உயரமான மரத்தின் உச்சியில் ஒரு கிளையில் நின்று கொண்டிருந்தது. இதுதான் தற்போது பெருமளவில் மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் நாயை அவர்கள் பார்க்கும் போது உற்சாகமாக வாலை ஆட்டிக் கொண்டு நிற்கிறது. பிறகு தீயணைப்புத்துறை மற்றும் விலங்கு மீட்பு பணியாளர்களை தொடர்பு கொண்டு குடும்பத்தினர் உதவி கேட்டபோது அவர்கள் உதவி செய்யவில்லை. ஒருவழியாக அந்த நாயை வெற்றிகரமாக மீட்டு பாதுகாப்பாக கீழே கொண்டு வந்தனர். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Brut பதிவைப் பகிர்ந்துள்ளார் (@brutamerica)