“எனக்குத்தான் கேப்டன் பதவி வேணும்!”… பிடிவாதம் பிடிக்கும் ருதுராஜ்… சஞ்சு சாம்சனின் அதிரடி முடிவு… சிஎஸ்கேவில் வெடித்த புது பிரச்சனை…!!

Spread the love

கடந்த 2025ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குள் நிலவிய சில உள்ளரசியல் மற்றும் அதிருப்தி காரணமாக, சஞ்சு சாம்சன் டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். ரவீந்திர ஜடேஜா போன்ற ஒரு மிக முக்கிய வீரரை விட்டுக்கொடுத்து, சுமார் 18 கோடி ரூபாய் செலவழித்து சிஎஸ்கே அவரை வாங்கியது. சிஎஸ்கேவில் இணைந்தது முதலே கேப்டன் பதவியை சாம்சன் எதிர்பார்த்து வந்த நிலையில், நிர்வாகம் அதற்கு உடனடியாக செவிசாய்க்கவில்லை. தற்போது 2027 ஐபிஎல் தொடருக்காகவாவது தன்னை கேப்டனாக்க வேண்டும் என அவர் கோரியும், சிஎஸ்கே தரப்பில் இருந்து தெளிவான பதில் கிடைக்காததால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கேப்டன்சி சிக்கலுக்கு முக்கியக் காரணம் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் என கூறப்படுகிறது. எந்தவொரு பெரிய வீரர் அணிக்கு வந்தாலும், தானே தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன் என்றும், தனக்கு வலுவான அணியை அமைத்துக் கொடுத்தால் கோப்பையை வென்று காட்டுவேன் என்றும் ருதுராஜ் உறுதியாக உள்ளார். மறுபுறம், ராஜஸ்தானில் கேப்டனாக வலம் வந்த தனக்கு இங்கு சாதாரண வீரராக ஆடுவது கௌரவப் பிரச்சனையாகவும், இந்திய டி20 அணியில் தனது இடத்தை மீண்டும் உறுதி செய்ய ஒரு அணியின் கேப்டனாக இருப்பது அவசியம் எனவும் சஞ்சு சாம்சன் கருதுகிறார். இதனால்தான் நிர்வாகத்தால் சாம்சனுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்க முடியவில்லை.

தனது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், மீண்டும் டிரேடிங் மூலம் வேறு அணிக்குச் செல்ல சஞ்சு சாம்சன் விரும்புவதாகவும், அவரை வளைத்துப் போட்டு கேப்டனாக்க கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் வலைவிரித்து காத்திருப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன. இருப்பினும், பெரும் விலை கொடுத்து வாங்கிய சாம்சனை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை. இதுவரை இந்த விவகாரங்கள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை; விரைவில் புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமித்த பின்னரே, சஞ்சு சாம்சனை சமாதானப்படுத்தி அணியில் தக்கவைப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சிஎஸ்கே நிர்வாகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gayathri

Recent Posts

“12 அடி ஆழ தொட்டியில் பரவிய நச்சு வாயு…” சுத்தம் செய்ய இறங்கிய 4 மாணவர்கள் துடிதுடித்து பலி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் செயல்பட்டு வரும் 'மகரிஷி குருகுல சம்ஸ்கிருத வித்யாலயா' பள்ளியைச்…

14 minutes ago

“இளம்பெண்ணின் இடுப்பில் கை வைத்து…” பஸ்ஸில் அசிங்கமாக நடந்து கொண்ட எம்.எல்.ஏ…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!

தெலங்கானா மாநிலம் இப்ராஹிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மால்ரெட்டி ரங்கா ரெட்டி, பேருந்தில் பயணம் செய்த இரண்டு இளம்பெண்களிடம் அநாகரிகமாக…

23 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! அரசு பேருந்து ஓட்டுனரை கொடூரமாக தாக்கிய கும்பல்… வெளியே இழுத்து வந்து சித்திரவதை…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகரில் உள்ள புல்பட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர்…

31 minutes ago

“சுவர்களில் விளம்பரங்கள், தெருவெங்கும் பிளாஸ்டிக்…” சீனாவின் மற்றொரு பக்கத்தை காட்டிய வ்லாகர்… விவாதத்தை கிளப்பிய வீடியோ…!!

இந்தியாவைச் சேர்ந்த பிரணவ் என்ற பயண விளாக்கர், சீனாவின் குவாங்சூ நகரில் உள்ள ஹைசூ பகுதியில் தான் கண்ட காட்சிகளை…

39 minutes ago

“இங்கிலாந்து சாலையில் ஓடும் இந்திய ஆட்டோ…” தேயிலைக்கு பின் பிரிட்டனுக்கு சென்ற மிகச்சிறந்த இறக்குமதி… வீடியோவை பார்த்து வியந்த நெட்டிசன்கள்…!!

தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அன்றாடப்…

51 minutes ago