தமிழகத்தில் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலே, இருந்த இடத்திலிருந்தே இணையதளம் வழியாக 24 மணி நேரமும் ஆவணங்களைப் பதிவு செய்யும் புதிய “வருகை இல்லா ஆவணப்பதிவு” (Faceless Registration) முறையைப் பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்களின் பயனர் கணக்கு (Login) மூலம் பதிவுத்துறை இணையதளத்தில் ஆவணங்களை உருவாக்கி, ஆன்லைன் வழியாகவே சமர்ப்பிக்க முடியும். இந்த ஆவணப் பதிவிற்குச் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் ஒப்புதல் அளித்தவுடன், அவருடைய டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய பத்திரம் பயனரின் அலைபேசிக்கு வாட்ஸ்ஆப் (WhatsApp) மூலமாகவே நேரடியாக அனுப்பி வைக்கப்படும். முதற்கட்டமாக, முதல் விற்பனை மனை (Plot), முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (Apartment), தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய விற்பனை ஆவணங்கள், வங்கிக் கடன் அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் ஆகியவற்றுக்கு இந்த அதிநவீன வசதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய டிஜிட்டல் நடைமுறையில் மோசடிகளைத் தவிர்த்து, பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆவணத்தை எழுதித் தருபவர், எழுதிப் பெறுபவர் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவரும் தங்களது அடையாள ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் சம்பந்தப்பட்ட நபர்களின் கைரேகை அல்லது கருவிழிப் படலம் (Iris) வழியாகத் தகுந்த சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்படும். இடைத்தரகர்களின் தலையீடின்றி, கால விரயத்தைத் தவிர்த்து, மக்கள் மிக எளிமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் தங்களின் பத்திரப் பதிவுகளை மேற்கொள்ள இப்புதிய தொழில்நுட்ப வழிவகை செய்கிறது.
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…