சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி சூட்கேஸ் ஒன்றில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், கொலை செய்யப்பட்டவர் அமீர் அலி என்பதை உறுதி செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய அவரது மனைவி ரஹீமா மற்றும் அவரது ஆண் நண்பரான அஸ்ரம் அலி ஆகிய இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தப்பியோட முயன்றவர்களைப் பிடித்து விசாரித்தபோது, கணவனின் கள்ளத்தொடர்புகளும் குடும்பத் தகராறுமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்ற அதிர்ச்சியூட்டும் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைதான ரஹீமா போலீசாரிடம் அளித்துள்ள பகீர் வாக்குமூலத்தில், அமீர் அலி தனக்கு இரண்டாவது கணவர் என்றும், அவர் பல பெண்களுடன் தவறான உறவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்டபோது, தனது முதல் திருமண வாழ்க்கை குறித்துப் பேசி அமீர் அலி தன்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஹீமா, தனது நண்பர் அஸ்ராம் அலியின் உதவியோடு கணவனைக் கொலை செய்து, அவரது ஆணுறுப்பைத் துண்டித்ததோடு, சடலத்தை அடையாளம் காண முடியாதபடி உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசியதாக ஒப்புக் கொண்டுள்ளார். கொலையுண்ட அமீர் அலியின் தலை இன்னும் கண்டறியப்படாததால், கைதான ரஹீமா கொடுத்த தகவலின் அடிப்படையில் கிண்டி மற்றும் தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆகஸ்டில் புதுச்சேரியிலுள்ள தனது சொந்த சகோதரர் மரிய கிளோத் வீட்டிற்குள் புகுந்து,…
டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் தவித்து வருகிறது.…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள்…
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார்…
முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…