உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் சுவரூப் நாராயண் மருத்துவமனைக்கு 2016 ஜனவரியில் நரேந்திர குமார் எனும் 18 வயது இளைஞன் கடுமையான வயிற்று வலியுடனும் வாந்தியுடனும் வருகிறான். சிறுவயதிலிருந்தே இந்த அவதியையும் உடல் எடைக் குறைவையும் சந்தித்து வந்த அவனுக்கு, அல்ட்ராசவுண்ட் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்தும் வயிற்றில் உள்ள கட்டியின் தன்மையை மருத்துவர்களால் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை. இதனால், மருத்துவர் ராஜீவ் சிங் தலைமையிலான குழுவினர் மூன்று மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அவனது வயிற்றிலிருந்து 2.5 கிலோ எடையும் 20 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட அந்த மாபெரும் கட்டியை அகற்றுகின்றனர்.
அறுவை சிகிச்சையின் போது வெளிப்பட்ட காட்சி மருத்துவர்களை உரைய வைத்தது. அந்த திரண்ட திரளையில் தலை, முடிகள், பற்கள், நெஞ்சுக்கூடு, முதுகெலும்பு ஆகிய உறுப்புகளுடன் பனிக்குட நீர் போன்ற மஞ்சள் நிற திரவமும் இருந்தது. மிக விசித்திரமாக, ஒரு தொப்புள் கொடி போன்ற அமைப்பின் மூலம் அந்த வளர்ச்சி நரேந்திரனின் ரத்த ஓட்டத்துடனும் உடலுடனும் பிணைக்கப்பட்டு, 18 ஆண்டுகளாக அவனது உடலிலிருந்தே ஊட்டச்சத்துகளை உறிஞ்சி வளர்ந்து வந்திருப்பது தெரியவந்தது.
மருத்துவ உலகில் இந்நிலை ‘ஃபீடஸ் இன் ஃபீடூ’ என்று அழைக்கப்படுகிறது. இரட்டை கருக்கள் உருவாகும் ஆரம்பக்கட்டத்தில், ஒரு கரு மற்றொரு கருவுக்குள் புகுந்து வளர்வது தடைபடும் அரிதான நிகழ்வு இதுவாகும். உலக மருத்துவ வரலாற்றிலேயே 200-க்கும் குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன. மருத்துவ அறிவியலில் சாதாரணக் கட்டியிலிருந்து இத்தகைய இரட்டைக் கருவை வேறுபடுத்திக் காட்டும் ஒரே முக்கியமான காரணி முதுகெலும்பு அமைந்திருப்பதே ஆகும்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…