2 நாணயங்களை விளையாட்டுத்தனமாக விழுங்கிய 7 வயது சிறுமி… சாதுரியமாக செயல்பட்ட மருத்துவர்கள் . அதிர்ச்சி சம்பவம்..!

By Nanthini on புரட்டாதி 4, 2025

Spread the love

திருப்பத்தூர் கோட்டை தெருவை சேர்ந்த தில்ஷாத் என்ற நபரின் இரண்டாவது மகள் தான் நிஸ்பா(7). இவர் திருப்பத்தூர் நகரில் உள்ள பூங்கா அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி தன்னுடைய வீட்டிலிருந்து ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடியுள்ளார். அப்போது விளையாட்டுத்தனமாக இரண்டு நாணயங்களையும் சிறுமி வாயில் போட்ட நிலையில் நாணயங்கள் சிறுமியின் தொண்டையில் சிக்கியது.

இதனால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனே பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தபோது நாணயங்கள் சிறுமியின் உணவு குழாயில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சாதூரியமாக செயல்பட்டு குழந்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அறுவை சிகிச்சை அரங்கில் வைத்து இரண்டு நாணயங்களையும் வெற்றிகரமாக வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றினர். இந்த செயலை பாதுகாப்பாக செய்து முடித்த மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.